ஈரோடு அருகே தறிப்பட்டறை தொழிலாளி தற்கொலை
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் மேட்டுப்புதூரைச் சேர்ந்தவர் துரைசாமி (65). தறிப்பட்டறை தொழிலாளியான இவர் கடந்த 6 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு சரிவர மருந்து மாத்திரைகள் சாப்பிடாமல் புகை மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் அவரது கிட்னி பாதிக்கப்பட்டதால் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. கடந்த பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனவேதனையில் இருந்த துரைசாமி வீட்டில் தனியாக இருந்த போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.