ஊத்துக்குளி: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா

54பார்த்தது
ஊத்துக்குளி: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா
ஊத்துக்குளியில் வீரபாண்டிய கட்டபொம்மன் நற்பணி மன்றத்தின் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் முன்னாள் பெருந்துறை எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தோப்பு என். டி. வெங்கடாசலம் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். 

தொடர்ந்து, வீரபாண்டிய கட்டபொம்மன் வேடமணிந்து வந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், பெத்த நாயக்கர் குடும்பத்தினர், கௌஷிக், சங்கர் சாமி, ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வீரபாண்டிய கட்டபொம்மன் நற்பணி மன்றத்தினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி