ஊத்துக்குளி -சென்னிமலை சாலைகளை இணைக்கும் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊத்துக்குளியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊத்துக்குளி தாலுக்கா குழு சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
ஊத்துக்குளி ஆர். எஸ் , அணைப்பாளையம், பாப்பம்பாளையம், புதுப்பாளையம், தேனீஸ்வரன்பாளையம், பி. ராமமூர்த்தி நகர் , ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அவினாசி -அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம் , குட்டைகளை இணைக்க வேண்டும், அணைப்பாளையம் மற்றும் புதுப்பாளையத்தில் சமுதாய நலக்கூடங்கள் அமைத்து தர வேண்டும், ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளையும் உருவாக்கி சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும், ஊத்துக்குளி ஆர் எஸ், திம்மநாயக்கன்பாளையம் ரயில்வே மேம்பாலத்திற்கு தெரு விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்,
ஊத்துக்குளி - சென்னிமலை ரோடு தேனீஸ்வரன்பாளையம் வழியாக செல்லும் பழுதடைந்துள்ள தார் சாலையை சீரமைக்க வேண்டும், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில் பொதுமக்களின் நலனை கருதி ஊத்துக்குளி-சென்னிமலை ரோடு பகுதிகள் வளர்ச்சியடைய ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் தெருமுனை பிரச்சாரம்போராட்டம் நடைபெற்றது