சிப்காட்டில் திறந்தவெளியில் கொட்டப்படும் தோல் கழிவுகள்

66பார்த்தது
சிப்காட்டில் திறந்தவெளியில் கொட்டப்படும் தோல் கழிவுகள்
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் சுமார் 10 தோல் ஆலைகள் இயங்கி வந்தன. தோல் ஷாப்புகளில் இருந்து தோல் ஆலை கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டதால் அங்குள்ள ஓடையிலும் பாலத்தொழுவு குளத்திலும் கலந்து இப்பகுதியில் நிலத்தடி நீர்வெகுவாக மாசுபட்டது. மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளின் மெத்தன போக்கினால் பல இடங்களில் நிலத்தடி நீர் கருப்பு நிறத்தில் மாறிவிட்டது. எனவே சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகளை மூடவேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் நடத்திய போராட்டம் காரணமாக தோல் ஆலைகள் மூடப்பட்டன.

அதேபோல அங்குள்ள தோல் ஆலைகளின் சுத்திகரிப்பு நிலையமும் மூடப்பட்டு விட்டது. ஆனால், முன்பு ஆலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த திடக்கழிவுகள் மட்டும் திறந்தவெளியில் எவ்வித பாதுகாப்புமின்றி கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த திடக்கழிவுகள் அனைத்தும் மழை பெய்தால், மழை நீருடன் கரைந்து அருகிலுள்ள நல்லா ஓடையில் கலப்பதுடன், பூமியிலும் தோல் கழிவு நீர் இறங்கி அப்பகுதியின் நிலத்தடி நீரையும் பெருமளவு மாசுபடுத்துகிறது.

ஏற்கனவே சிப்காட் பகுதியில் நிலத்தடி நீர் பெரிதும் மாசுபட்டுள்ளதால் சிப்காட்டை சுற்றியுள்ள கிராம மக்கள் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ள நிலையில் இந்தத் தோல் ஷாப் திடக்கழிவுகள் திறந்தவெளியில் கிடப்பதால் அங்குள்ள நிலமும், நீரும் பெரிதும் மாசுபடுகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி