ஈரோடு மாவட்டம் பெருந்துறையில்
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்துள்ள பேட்டி: 2026ம் ஆண்டு நல்ல மாற்றம் ஏற்படும் வேண்டும் என்ற அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தி வருகிறோம். மத்திய அரசு 100 நாட்களில் 15 லட்சம் கோடி ரூபாய் நிதியும் உள்கட்டமைப்புக்காக 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு 7ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள மாநிலம் அணைக்கட்ட முயற்சி செய்ததை தடுத்தது மத்திய அரசு தான்.
மத்திய அரசுக்கு தமிழகத்தின் மீது அதிக அக்கறை கொண்ட நிலையில் அக்கறை இல்லாத தோற்றத்தை தமிழக முதல்வர் கொண்டு வருகிறார். மத்திய அரசு 70வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு காப்பீடு மற்றும் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.