குன்னத்தூர் பகுதியில் புகையிலை பொருட்கள் பறிமுதல்.

67பார்த்தது
குன்னத்தூர் பகுதியில் புகையிலை பொருட்கள் பறிமுதல்.
குன்னத்தூர் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீது குன்னத்தூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பெருந்துறையை அடுத்துள்ள குன்னத்தூர் பகுதியில் மளிகை கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சுமார் 15 பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை குன்னத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோன்று குன்னத்தூர் அருகே உள்ள வெள்ளிரவெளி ஊராட்சி பகுதியை சேர்ந்த சம்பத்குமார் என்பவரிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சம்பத்குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி