ஊத்துக்குளியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினரை 56 பெண்கள் உட்பட 123 பேர்களை ஊத்துக்குளி போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு மற்றும் பட்ஜெட்டை கண்டித்து இ. கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஊத்துக்குளி ஆர் எஸ், பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக ஈடுபட்டனர். நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் சிபிஐஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார், ஊத்துக்குளி இ. கம்யூனிஸ்ட் தாலுகாசெயலாளர் சரவணன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 123 பேர்களை ஊத்துக்குளி போலீசார் கைது செய்தனர். பாதுகாப்பு பணியினை ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்வீன்பானு , போலீஸ் எஸ்ஐ பாலமுருகன் மற்றும் போலீசார் மேற்கொண்டிருந்தனர்.