ஈரோடு: மனைவி மீது பெட்ரோல் பாட்டில் வீசிய வியாபாரி கைது

82பார்த்தது
ஈரோடு: மனைவி மீது பெட்ரோல் பாட்டில் வீசிய வியாபாரி கைது
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே துடுப்பதியை சேர்ந்தவர் முத்து (48). ஐஸ் வியாபாரி. இவரது மனைவி செல்வி (40). இவர்களுக்கு இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். முத்து தினமும் மது அருந்தி வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். 

இதனால் தனது சொந்த ஊரான தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்துக்கு சென்றுவிட செல்வி முடிவு செய்தார். இளைய மகளுடன் பாலாக்கரை என்ற இடத்தில் செல்வி வந்து கொண்டிருந்தார். இதை அறிந்து அங்கு சென்ற முத்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு பீர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைத்து மனைவி மீது வீசி உள்ளார். 

இதில் செல்வியின் கால்கள் மற்றும் கைவிரல்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செல்வி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் முத்துவை திங்களூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி