2024 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவர் அனிருத் 720க்கு 685 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் இடத்தையும், மாணவர் தினேஷ் 652 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவர் ஸ்ரீசாந்த் 595 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும், மாணவர் யஸ்வந்த் 572 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தையும் பிடித்துள்ளனர். கொங்கு பள்ளி மாணவ மாணவிகள் மாநில மற்றும் மாவட்ட அளவில் பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்து வருகின்றனர். பள்ளியிலேயே தலைசிறந்த வல்லுனர்களால் நீட் மற்றும் ஜேஇஇ சிறப்பு வகுப்புகள் நடைபெறுகிறது. ஆர்ட்ஸ் பிரிவு மாணவர்களுக்கு, சிஏ பவுண்டேசன் மற்றும் டேலி சிறப்பு வகுப்புகள் நடைபெறுகிறது.
நீட் தேர்வுகளில் வெற்றி பெற்ற சாதனை படைத்த மாணவ மாணவிகளையும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் பெற்றோர் உள்ளிட்ட அனைவரையும், பள்ளியின் தலைவர் யசோதரன், தாளாளர் சென்னியப்பன், பொருளாளர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் சென்னியப்பன், இணைச்செயலர் டாக்டர் முத்துராமலிங்கம், நிர்வாக குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பள்ளியின் முதல்வர் முத்து சுப்பிரமணியம் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலரும் பாராட்டி வாழ்த்தினர்.