சென்னிமலை: கருவேல மரங்களை ஜேசிபி மூலம் அகற்ற எதிர்ப்பு

67பார்த்தது
சென்னிமலை: கருவேல மரங்களை ஜேசிபி மூலம் அகற்ற எதிர்ப்பு
சென்னிமலை அருகே வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டில் ஜேசிபி இயந்திரம் மூலம் சீமை கருவேல மரங்களை அகற்ற சிலர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அப்பணிகள் நிறுத்தப்பட்டது. 

சென்னிமலை முருகன் கோயில் அமைந்துள்ள வனப்பகுதி சுமார் 1,700 ஏக்கர் பரப்பளவை கொண்டதாகும். இதில், பழனி ஆண்டவர் கோயில் அருகிலுள்ள காப்புக்காட்டில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு, ஈரோடு வனத்துறை அலுவலகத்தில் கடந்த 12-ம் தேதி ஏலம் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஏலத்தில், திருச்சியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் ரூ.18 லட்சத்திற்கு ஏலம் எடுத்திருந்தார். 

அதனைத்தொடர்ந்து கடந்த 4 நாட்களாக சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு லாரியின் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், வழக்கம்போல் நேற்று சீமை கருவேல மரங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த சிலர், சீமை கருவேல மரங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அகற்றப்பட்ட மரங்களை லாரியில் ஏற்றி வந்தால் சாலையில் நின்று தடுப்போம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி