ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய ஆர்எஸ். நடுநிலை பள்ளியில் பள்ளியின் வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஊத்துக்குளிஆர் எஸ் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளியின் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்முன்னாள் மாணவர்கள் , இந்நாள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் வளர்ச்சி மற்றும் பள்ளியின் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றிட ஆலோசனைகள் மேற் கொள்ளப்பட்டது. வருகிற சுதந்திர தினவிழாவினை சிறப்பாகக் கொண்டாடிடத் திட்டமிடப்பட்டது. ஆகஸ்ட் 31 அன்று நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு, மற்றும் பள்ளிப் புரவலர் திட்டம் பற்றிய விபரங்கள் தலைமை ஆசிரியரால் வழங்கப்பட்டது. மேலும் எதிர்காலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் நலனை கருதி பள்ளியின் வளர்ச்சிகள் குறித்தும் ஆலோசனைகள் முன்னாள் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது.