தமிழகம் முழுவதும் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஜி.ஜவகர், சென்னை வடக்கு மண்டல சிபிசிஐடி எஸ்.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தின் புதிய எஸ்.பி. ஆக திருப்பூர் மாநகர (வடக்கு) சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக பணிபுரிந்து வரும் ஏ.சுஜாதா நியமிக்கப்பட்டுள்ளார்.