குன்னத்தூரில் சாலையில் களமிறங்கி வளர்ச்சிப் பணிகளை குன்னத்தூர் பேரூராட்சி தலைவர் மேற்கொண்டார்.
குன்னத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட ஊத்துக்குளி ரோடு பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அதன் பொருட்டு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சாலையின் சென்டர் மீடியத்தில் மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ள நிலையில் 10-வது வார்டு கவுன்சிலர் சரண் பிரபுமற்றும் 7-வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி கார்த்திகேயன் ஆகியோருடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் ஒயர்கள் கொண்டு செல்வதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தார் சாலை அமைக்கும் பணிகள் விரைந்து நடை பெற்றதால் பணியாளர்கள் வரும் வரை காலதாமதம் ஆகிவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு இரும்பு குழாய்கள் பதிக்கும் பணியினை பேரூராட்சி தலைவர் கொமரசாமி தானே பணிகளை மேற்கொண்டார். பணிகளை காலதாமதம் இன்றி விரைந்து மேற்கொண்ட பேரூராட்சி தலைவரை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் பாராட்டினர்.