பெருந்துறை ரோட்டில் மயங்கி கிடந்த தொழிலாளி சாவு.

68பார்த்தது
பெருந்துறை ரோட்டில் மயங்கி கிடந்த தொழிலாளி சாவு.
பெருந்துறையை அடுத்துள்ள சென்னிமலை ரோடு பகுதியில் ரோட்டோரத்தில் மயங்கி விழுந்து கிடந்த தொழிலாளி பரிதாபமாக இறந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் அருகே உள்ள கள்ளன்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் மகன் அரவிந்தன் (24). இவர் பெருந்துறை அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் பெருந்துறை - சென்னிமலை ரோட்டில் வேட்டுவபாளையம் பிரிவு அருகே மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பு லன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அரவிந்தன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சக்திவேல் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த மனுவில் அவர், ‘தனது மகன் அரவிந்தன் சாவில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி யிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி