பெருந்துறை அருகே சட்டவிரோத மது விற்பனை: இரண்டு பேர் கைது.

62பார்த்தது
பெருந்துறை அருகே சட்டவிரோத மது விற்பனை: இரண்டு பேர் கைது.
பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் மற்றும் காஞ்சி கோவில் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்டம் முழுவதும் சட்டவிரோதம் மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த வகையில் பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் மற்றும் காஞ்சி கோவில் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் அந்தப் பகுதியில் நடத்திய சோதனையில் விஜயமங்கலம் பகுதியைச் சேர்ந்த கங்காதரன் (50) காஞ்சி கோவில் சேத்து குட்டை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (35) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி