குன்னத்தூரில் நடைபெற்ற கருப்பட்டி ஏலத்தில் ரூ. 3 லட்சத்திற்கு ஏலம் போனது.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி விற்பனை சம்மேளனம் குன்னத்தூரில் இயங்கி வருகிறது. இன்று நடைபெற்ற ஏலத்தில் தென்னங்கருப்பட்டி வரத்து 2500 கிலோவாக கொண்டுவரப்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூ. 120 வீதம் மொத்தம் ரூ. 3, 00, 000-. க்கு ஏலம் போனது. பனங்கருப்பட்டி வரத்து இல்லாததால் ஏலம் நடைபெறவில்லை. இத்தகவலை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி விற்பனை சம்மேளன மேலாண்மை இயக்குனர் பாலசுப்பிரமணியன், மேலாளர் முருகானந்தம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.