பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சி கோவில் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்த சம்பவம் தொடர்பாக காஞ்சி கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர். பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில், ஆயப்பரப்பை சேர்ந்தவர் கார்த்திகேயன் (42). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள புதிய கட்டிடத்தில் மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயன் அசைவின்றி கீழே கிடந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கார்த்திகேயன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கார்த்திகேயனுக்கு ஆனந்தி (40) என்கிற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.