பெருந்துறையில் அண்ணாமலையை கண்டித்து காங்கிரசார் சாலை மறியல்.

64பார்த்தது
பெருந்துறையில் அண்ணாமலையை கண்டித்து காங்கிரசார் சாலை மறியல்.
தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையை கண்டித்து சாலை மறியல் மற்றும் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் பெருந்துறையில் நடைபெற்றது.

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை தரக்குறைவாக விமர்சனம் செய்த பா ஜ க மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து சாலை மறியல், உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது பெருந்துறை புதிய பஸ் ஸ்டாண்ட் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னால் எம்எல்ஏ பழனிசாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், வட்டார தலைவர்கள் ராவுத்தகுமார், ஆண்ட முத்துசாமி, சண்முகம், சர்வேஸ்வரன், பழனிசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மறியல் போராட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. அவரை கண்டிக்கும் விதத்தில் இனிமேல் தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர்களை அவர் பேசி அவமரியாதை செய்யக்கூடாது என உருவ பொம்மையும் எரிக்க முற்பட்ட பொழுது காவல்துறை தடுத்து நிறுத்தினர். மறியல் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை பெருந்துறை டிஎஸ்பி (பொறுப்பு) ஆறுமுகம், இன்ஸ்பெக்டர்கள் தெய்வ ராணி, துரைராஜ், பிரேம் குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஒரு பெண் உள்ளிட்ட 40 பேரும் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி