ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மது போதை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் தீரன் பாசறை நல சங்கம் சார்பிலும் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கப்பட்டது. இதனால் சுற்றுச்சூழல் மேம்படும் என்ற வகையில் பள்ளி மாணவர்களுக்கு இடையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவ்விழாவில் பெற்றோர் ஆசிரியர் தலைவர் ராவுத்தப்பன் அவர்களும் பள்ளி தலைமையாசிரியர் அவர்களும் தீரன் பாசறை நல சங்கத்தினரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கப்பட்டது பின்பு லைப் லைன் டிரஸ்ட் சேலம் அவர்கள் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு மது போதை விழிப்புணர்வு சொற்பொழிவு ஆற்றினார்.