ஊத்துக்குளி அருகே  வேன் மோதி முதியவர் பலி.

72பார்த்தது
ஊத்துக்குளி அருகே  வேன் மோதி முதியவர் பலி.
ஊத்துக்குளி அருகே இரு சக்கர வாகனம் மீது தனியார் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெருந்துறையை அடுத்துள்ள ஊத்துக்குளி ஆர் எஸ், காங்கயம் ரோடு, வேலம்பாளையம் பிரிவு பகுதியில் வசித்து வருபவர் ராசன் (76). இவர் சம்பவத்தன்று செங்கப்பள்ளி ரோடு, பூசாரிபாளையம்  அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த தனியார் பள்ளி வேன்  எதிர்பாராத விதமாக இவர் மீது மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் மருத்துவசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி