வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை

4644பார்த்தது
ஈரோடு கருங்கல்பாளையம் காவேரிக்கரை முனியப்பன் நகரை சேர்ந்த செல்வம் மகன் ஜீவா(21). இவர், பிபிஏ படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். மேலும், ஜீவா அவர் படித்த படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என புலம்பி வந்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த ஜீவா கடந்த 5ம் தேதி மாலை வீட்டின் சமையல் அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் ஜீவாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜீவா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜீவாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி