பெருந்துறையை அடுத்துள்ள வெள்ளோடு அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளியை தீயணைப்புத் துறையின் உயிருடன் மீட்டனர்.
பெருந்துறையை அடுத்துள்ள வெள்ளோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் (34). தொழிலாளியான இவர் நேற்று முன் தினம் இரவு தனது நண்பர்களுடன் தர்மன் நகர் பகுதிக்கு சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக அந்தப் பகுதியில் இருந்த சுமார் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்த 30 அடி தண்ணீர் விழுந்த ஜான்சன் உயிருக்கு போராடினார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்னிமலை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் இறங்கி, சுமார் அரை மணி நேரம் போராடி ஜான்சனை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.