பெருந்துறை பைபாஸ் ரோடு பகுதியில்பெண்களை விபச்சாரத்திற்கு ஈடுபடுத்திய 2 பெண்கள் உள்ளிட்ட மூன்று பேரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடத்தி வருவதாக பெருந்துறை போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது 4 பெண்கள் இருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 4 பேரும் வேலை தேடி வந்த போது, 2 பெண்கள் உள்பட 3 பேர் தங்களுக்கு வேலை தருவதாக கூறி, இந்த விடுதிக்கு அழைத்து வந்து விபசாரம் செய்ய வற்புறுத்துவதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியதாக சிவகிரியை சேர்ந்த ஷகிலா (40), திருப்பூரைச் சேர்ந்த லலிதா (38) மற்றும் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சாஜன் (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் 4 பேரும் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.