ஊத்துக்குளி ஆர் எஸ்-ல் 25 நாட்களாக தண்ணீர் இன்றி தவிப்பு.

69பார்த்தது
ஊத்துக்குளி ஆர் எஸ்-ல் 25 நாட்களாக தண்ணீர் இன்றி தவிப்பு.
ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட 13 -வது வார்டு பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 5. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான பணிகள் நடைபெற்றது. பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய் இணைப்பானது துண்டிக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் கடந்த 25 நாட்களாக குடிநீர் நிறுத்தம் ஏற்பட்டது. தற்போது இதற்கான பணிகள் நிறைவுற்று ஒரு வாரம் ஆன நிலையில்  ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த குடிநீர் குழாய் இணைப்புகள் சரி செய்து கொடுக்கப்படாததால் இப்பகுதி பொதுமக்கள் கடந்த 25 நாட்களாக தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டிருக்கும் பகுதிகளானது இப்பகுதியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி ஆகியவையும் அமைந்திருக்கிறது. இப்பகுதிகளுக்கு வந்து செல்லும் வாகன ஓட்டுனர்கள் , நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலனை கருதி உடனடியாக குடிநீர் இணைப்புகளை சரி செய்து 13- வது வார்டு பொதுமக்களின் தண்ணீர் குறைபாடுகளை தவிர்த்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் , வாகன ஓட்டுனர்களின் நலனை கருதி சாலையில் சீரமைக்கப்படாமல் உள்ள மண் திட்டுகளை சீரமைக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி