ஈரோடு மாநகராட்சி வார்டுகளில் தற்போது 23 ஆயிரம் எல் ஈ டி தெரு விளக்குகள் தானியங்கி கட்டுப்பாடு கருவி மூலம் இயங்குகிறது. இந்நிலையில் மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் போதிய திருவிளக்குகள் இல்லை என கவுன்சிலர்கள் அடிக்கடி புகார் தெரிவித்தனர். இதற்கு முதற்கட்டமாக அரசு ரூபாய் 15 கோடி மதிப்பில் 5, 400 எல். ஈ. டி தெரு விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருவதாக ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.