சென்னிமலை: கஞ்சா வைத்திருந்த 3 பேரை கைது செய்த போலீசார்
சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சென்னிமலை அருகே ஈங்கூர் சிப்காட் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள கவுண்டனூர் பிரிவில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்களை விசாரித்த போது ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுமந்த் குமார் மாலிக் (36), அதே மாநிலம் ஜெகத்சிங்பூர் மாவட்டத்தை சேர்ந்த திபேந்திரநாத் (27) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் பூச்சம்பள்ளியை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (25) என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.