சென்னிமலை: வீட்டின் பூட்டை உடைத்து 16¾ பவுன் தங்க நகைகளை திருட்டு
சென்னிமலை அருகே ஈங்கூர் ரோடு முகாசிபிடாரியூர் வண்ணாம்பாறை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (35). இவருடைய மனைவி கோமதி (30). மூர்த்தி பெருந்துறையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம்போல் காலை 8. 30 மணிக்கு மூர்த்தியும் அவரது மனைவி கோமதியும் பெருந்துறையில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்று விட்டனர். அப்போது மூர்த்தியின் தாய் பழனியம்மாள் (65) என்பவர் தங்கள் வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டார். பின்னர் மதியம் 1. 30 மணியளவில் பழனியம்மாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து பழனியம்மாள் தனது மகன் மூர்த்திக்கு தகவல் கொடுத்தார். மூர்த்தியும் அவரது மனைவி கோமதியும் உடனடியாக வண்ணாம்பாறையில் உள்ள தங்கள் வீட்டுக்கு வந்தனர். அங்கு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த 2 பீரோக்களும் திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களும் சிதறி கிடந்துள்ளது. மேலும் பீரோக்களில் இருந்த 2½ பவுனில் 3 தங்க சங்கிலிகள் வீதம் 7½ பவுனும், 2 பவுனில் 1 தங்க சங்கிலியும், 1 பவுனில் 1 சங்கிலியும், 3 பவுனில் 2 வளையல்களும், ¾ பவுனில் ஒரு காது தோடும், 2½ பவுனின் 1 பிரேஸ்லெட் என மொத்தம் 16 ¾ பவுன் தங்க நகைகளும், 1 வெள்ளி டம்ளர், 1 வெள்ளி கிண்ணம், வெள்ளி கொலுசு 5 ஜோடி மற்றும் 2 அரைஞான் கயிறு ஆகியவை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.