ஈரோடு நகரில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. திடீரென பிற்பகல் 3 மணியளவில் வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. தொடர்ந்து 4.45 மணியளவில் லேசான காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. சில நிமிஷங்கள் மட்டுமே காற்று வீசிய நிலையில் காற்றின் வேகம் முற்றிலும் குறைந்து பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
காற்றின் ஆரவாரம் இன்றி சுமார் ஒன்றரை மணி நேரம் மழை பெய்தது. பின்னர் மழையின் வேகம் குறைந்து மிதமான மழையாக நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. இ
ந்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதி களில் தண்ணீர் தேங்கியது. மழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது. இந்த மழை காரணமாக பகலின் வெப்பம் தணிந்து, இரவு முழு வதும் குளிர்ச்சியான காலநிலை நிலவியது.
ஈரோடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை யிலான 24 மணி நேரத்தில் மொடக்குறிச்சியில் அதிகபட்சமாக 80 மில்லி மீட்டர் மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழைய ளவு விவரம் (மில்லி மீட்டரில்):
கவுந்தப்பாடி 45.60, ஈரோடு 40, பவானி 25.80, கொடுமுடி 22, குண் டேரிப்பள்ளம் அணை 17, வரட்டுப்பள்ளம் அணை 13.40, கோபி 12.20, சென்னிமலை 12, அம்மாபேட்டை 11, எலந்தக்குட்டைமேடு 8, தாளவாடி 7, பெருந்துறை 5, சத்தியமங்கலம் 4, கொடிவேரி 3, பவானிசாகர் அணை 2.20 மி.மீ பதிவானது.