ஈரோடு மாவட்டம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை சப் இன்ஸ்பெக்டர் மேனகா ஈரோடு மாவட்டம் பறக்கும் படை தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் போலீசார் கொடுமுடி காவல் நிலைய சரகம் அரசம்பாளையம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாருதி ஆம்னி வேன் ஒன்று வந்தது. வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 100 கிலோ வீதம் 8 மூட்டைகளில் மொத்தம் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வாகனத்தை ஓட்டி வந்த அபுதாகிர் மற்றும் அவருடன் இருந்த சாதிக் அலி ஆகியோரை விசாரிக்க கரூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கொடுமுடி பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்குவதற்காக மேற்கண்ட ஆம்னி வண்டியை வாங்கி கொடுத்து ரேஷன் அரிசி சேகரித்து கொடுக்க சொன்னதாக கூறினார்கள். சதீஷ்குமார் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணை செய்ய வந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் கோபிசெட்டிபாளையம் உள்ள மாவட்ட கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.