சென்னிமலையில் கடந்த 2 நாட்களாக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. நேற்று சென்னிமலை பஸ் நிலையம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் முன்னிலையில் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. கடைகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட கான்கிரீட் தளங்களையும் அகற்றி வருகின்றனர் .