ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்து எழுமாத்தூர் ஊராட்சியில் ஏழு வாரமாக சம்பளம் வரவில்லை MGNREGA திட்டப் பணியாளர்கள் எழுமாத்தூர் பேருந்து நிலையத்தில் சாலை மறியல்
போராட்டம். எங்களுக்கு சம்பளம் உடனடியாக வழங்க வேண்டும் என்று பேரூராட்சி தலைவர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு இடமும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வலியுறுத்தினர். அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேல் சாலை
போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.