ஓபிஎஸ். க்கு ஆதரவாக ராமநாதபுரத்தில் ஈரோடு அணியினர் பிரசாரம். ஈரோடு, ஏப்ரல் 14: ஓபிஎஸ்க்கு ஆதரவாக ராமநாதபுரத்தில் ஈரோடு அணியினர் பிரசாரம் மேற்கொண்டனர்.
பாஜக கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதையொட்டி ஓபிஎஸ் ராமநாதபுரம் பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ஈரோடு மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணியின் பொருளாளர் ஆயில் துரை தலைமையில் கட்சியினர் ராமநாதபுரம் தொகுதிக்கு சென்று ஓபிஎஸ். க்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். முன்னதாக ஈரோடு அணியினர் ஓபிஎஸ். ஐ நேரில் சந்தித்து பலாப்பழம் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.