சென்னிமலையில் ஊத்துக்குளி ரோட்டில் ஆதித்யா நகரில் உள்ள ஓம் குபேர பகவான் ஆலயத்தில் நேற்று (ஜூன் 11) மாதாந்திர மகாலட்சுமி குபேர யாகம் நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் கடன் தொல்லையில் இருந்து விடுபடவும், வியாபாரம் மற்றும் செல்வ வளம் பெருகவும் வேண்டி நடைபெற்ற யாகத்தில் குபேர கலசம் முழுவதும் 30 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். யாகத்தின் முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் யாகத்தில் வைக்கப்பட்ட நாணயங்கள் மற்றும் பச்சை கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது.