வெல்லம், நாட்டு சர்க்கரை மூட்டைக்கு ரூ. 30 உயர்வு

61பார்த்தது
வெல்லம், நாட்டு சர்க்கரை மூட்டைக்கு ரூ. 30 உயர்வு
ஈரோடு அடுத்த சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 30 கிலோ எடை கொண்ட, 1, 800 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தா னது. ஒரு மூட்டை, 1, 250 ரூபாய் முதல், 1, 380 ரூபாய் வரை விற்பனையானது. உருண்டை வெல்லம், 2, 400 மூட்டை வரத் தாகி, ஒரு மூட்டை,

1, 310 ரூபாய் முதல், 1, 410 ரூபாய்; அச்சு வெல்லம், மூட்டை 260 வரத்தாகி ஒரு மூட்டை, 1, 360 ரூபாய் முதல், 1450 ரூபாய் வரை விற்றது. கடந்த வாரத்தை விட நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் வரத்து சற்று குறைந் தது. அதேசமயம் மூன்றும், மூட்டைக்கு, 30 ரூபாய் விலை உயர்ந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி