அம்மா உணவக வளாகத்தில், மது போதையில் குடிமகன்கள் உலா

60பார்த்தது
அம்மா உணவக வளாகத்தில், மது போதையில் குடிமகன்கள் உலா
ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அம்மா உணவக வளாகத்தில், மது போதையில் குடிமகன்கள் வந்து உறங்குவதை தவிர்க்கும் வகையில், சட்டர் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு காந்திஜி சாலையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த அம்மா உணவக வளாகத்தில், இரவு நேரங்களில் சிலர் மது அருந்தி விட்டு உறங்கி வருகின்றனர்.
மேலும், மது அருந்தி விட்டு அதே இடத்தில் பாட்டில்களை உடைத்து விட்டும் செல்கின்றனர். இது அம்மா உணவகத்துக்கு வரும் பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்கும் பெரிதும் இடையூறாக இருந்தது.
இதனால், அம்மா உணவகத்தின் முன்பு சட்டர் அமைக்க வேண்டும் என உணவகத்தின் ஊழியர்கள், மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில், அம்மா உணவக வளாகத்திற்கு, சட்டர் அமைக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :