மொடக்குறிச்சிஅரசுக் கல்லூரிமாணவர்களுக்கு வழிகாட்டுதல்பயிற்சி

55பார்த்தது
மொடக்குறிச்சிஅரசுக் கல்லூரிமாணவர்களுக்கு வழிகாட்டுதல்பயிற்சி
மொடக்குறிச்சி அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி

மொடக்குறிச்சி, ஜூலை 9: மொடக்குறிச்சி அரசு கலை, அறிவியல்

கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சி வகுப்புக்கு கல்லூரி முதல்வர் எபெனேசர் தலைமை வகித்தார். வணிகவியல் துறைத் தலைவர் சபிதா வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஈரோடு எம். பி. பிரகாஷ் கலந்து கொண்டு, கல்லூரி மாணவர்களின் உயர்கல்வி என்ற தலைப்பில் கலந்துரையாடினார்.

அப்போது, மாணவ, மாணவிகள் கடின உழைப்பால் கல்விகற்று முன்னேற வேண்டும். மாணவர்களின் நலனுக்காக நான் முதல் வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு கொண்டு வந் துள்ளது. இதனை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மொடக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் தங்கி படிப்பதற்கு வசதியாக விடுதி வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில், அனைத்துத் துறை பேராசிரியர்கள், பேராசிரியை கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி