தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி. என். பி. எஸ். சி. , ] நடக்க உள்ள குரூப்-1ல் அடங்கிய காலி பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்க ளுக்கு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை, 10: 00 மணி முதல் மாலை, 4: 00 மணி வரை நடக்க உள்ளது. பங்கேற்க விரும்புவோர், மையத்தில் உள்ள க்யூ. ஆர். கோடை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், ஆதார் எண், புகைப் படம் ஆகியவற்றை, ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள மையத்தில் வழங்க வேண்டும். கூடுதல் விபரத்தை, 0424 2275860, 9499055943 என்ற எண்களில் அறியலாம்.