ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த ஊஞ்சலூர் பணப்பாளையத்தில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இந்த நிலையில் அக்கிரமிப்பு அகற்ற கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கொடுமுடி தாசில்தார் பாலகுமார் மற்றும் நில வருவாய் ஆய்வாளர் , ஊஞ்சலூர் கிராம நிர்வாக அலுவலர் சுகாதார மற்றும் ஊஞ்சலூர் பேரூராட்சித் தலைவர் சசிகலா ஆகியோர் முன்னிலையில் JCB இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றினர்.