ஈரோடு அருகே புங்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் பரத். , டிரைவரான இவர் சொந்தமாக சுற்றுலா வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மூலப்பாளையத்தில் இருந்து சேலம் வரை சுப நிகழ்ச்சிக்காக வாடிக்கையாளரை அழைத்து செல்ல வீட்டில் இருந்து வாகனத்தை எடுத்து கொண்டு பெருந்துறை சாலை வழியாக ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். , அப்போது வேப்பம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது வாகனத்தின் முன் பகுதியில் இருந்து தீடிரென கரும்புகை வருவதை பார்த்த ஓட்டுநர் பரத் வாகனத்தை சாலையோரம் நிறுத்தி கரும்புகை அணைக்க அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்து தீயணைப்பு கருவியை கொண்டு முயற்சி செய்தார். இருப்பினும் கரும்புகையுடன் தீ வாகனத்தின் முன்பகுதி உட்பட வாகனம் முழுவதும் பரவி எரியத் தொடங்கியது. இதையடுத்து வாகனத்தின் உரிமையாளர் பரத் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.