ஈரோடு: போன் பேசிக் கொண்டிருந்தவரை கற்களால் தாக்கிய 5 பேர் கைது

65பார்த்தது
ஈரோடு: போன் பேசிக் கொண்டிருந்தவரை கற்களால் தாக்கிய 5 பேர் கைது
ஈரோடு, மாமரத்துபாளையம், அம்மன் நகர், 2வது வீதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (41). இவர், நேற்று நள்ளிரவு 12.10 மணியளவில் எல்லப்பாளையத்தில் இருந்து மாமரத்துபாளையம் செல்லும் ரோட்டில் உள்ள அரசு பள்ளி அருகில் தனது காரை நிறுத்திவிட்டு போன் பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியாக வந்த 5 வாலிபர்கள், லோகநாதனின் காரின் முன்னால் நின்று பாட்டு பாடியுள்ளனர். அதற்கு, லோகநாதன் 'ஏன் எனக்கு முன்னால் வந்து இப்படி செய்கிறீர்கள்?' எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் 5 பேரும், 'அப்படித்தான் பாட்டு பாடுவோம்' எனக் கூறியதுடன் லோகநாதனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். 

இதைய்எடுத்து லோகநாதன் அவர்களிடம், 'இவ்வாறு செய்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிப்பேன்' என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் 5 பேரும் கீழே கிடந்த கற்களை எடுத்து லோகநாதனை சரமாரியாக தாக்கியுள்ளனர். 

இதில் லோகநாதனுக்கு கண், காது, முதுகு, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரும் லோகநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்து, அங்கிருந்து ஆட்டோவில் ஏறி சென்றுவிட்டனர்.

தொடர்புடைய செய்தி