கோபி அருகே தொழிலாளி சாவு

81பார்த்தது
கோபி அருகே தொழிலாளி சாவு
கோபி அருகே உள்ள பாரியூர் வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார் (30). கூலித்தொழிலாளி. கடந்த மாதம் 27ஆம் தேதி வெள்ளாளபாளையத்தில் இருந்து கோபிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். முருகன் புதூர் அருகே சென்றபோது எதிர்பாராத வகையில் நிலை தடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்துவிட்டார். 

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவக்குமார் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி