கோபிசெட்டிபாளையம் பசுமை நகர் போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டுவரும் போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோபி காவல் நிலைய ஆய்வாளர் காமராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுத்தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற
உறுப்பினர்களின்
குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுதல்களை தெரிவித்தார்.