ஒருமையில் பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க விட்டால் ஜனவரி 2-ம் தேதி முதல் தணிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்று அனைத்து பணியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
ஈரோடு கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக பதிவறை எழுத்தர் மீது தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட கிளை சார்பாக கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணைக்கு கடந்த 18-ஆம் தேதி கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் சென்றனர்.
அப்போது புகாருக்குள்ளானவரை பாதுகாக்கும் நோக்கில் தங்களை மரியாதை குறைவாக ஒருமையில் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் பேசினார் என்று நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர். அவர் மீது நடவடிக்கை கோரி சென்னை தலைமை தணிக்கை இயக்குனர் கூட்டுறவு தணிக்கை இயக்குனருக்கு புகார் அனுப்பினர்.