கோபி: மதுபோதையில் தகராறு.. அண்ணன், தம்பியை தாக்கிய 2 பேர் கைது

53பார்த்தது
கோபி: மதுபோதையில் தகராறு.. அண்ணன், தம்பியை தாக்கிய 2 பேர் கைது
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த டி.என்.பாளையம் சிவசக்தி நகர் கருப்பராயன் கோவிலில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் மதுபோதையில் தகராறு செய்ததாகத் தெரிகிறது. இதைச் சின்னவாய்க்கால் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57) என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி போன் செய்து பங்களாப்புதூரைச் சேர்ந்த சசிக்குமார் (31), டி.என்.பாளையத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் (24) ஆகிய இருவரையும் வரவழைத்து ராஜேந்திரனைச் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

அந்தச் சமயத்தில் அங்கு வந்த ராஜேந்திரனின் அண்ணன் வேலுமணி அவர்களைத் தடுத்துள்ளார். அப்போது தமிழ்செல்வன் வேலுமணியையும் தாக்கியதாகத் தெரிகிறது. தமிழ்செல்வன் சசிக்குமார் இருவரிடமிருந்து தாக்குதலுக்குள்ளான ராஜேந்திரன், வேலுமணி ஆகியோர் சிகிச்சைக்காகக் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிக்குமார், தமிழ்செல்வன் இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி