நம்பியூர் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் லோகநாதன் 47 சலூன் கடை நடத்தி வருகிறார் இவரது மனைவி ராதா மணி 38 திருப்பூர் பனியன் கம்பெனியில்
வேலை செய்கிறார் இவர்களுக்கு ஹரிஹரன் 21
சஞ்சய் 18 என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று ராதாமணி வேலைக்குச் சென்ற நிலையில் லோகநாதன் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டிதொங்கிய படி இருந்ததை பார்த்த இளைய மகன்
சஞ்சய் சத்தம் போட்டு அருகில் இருந்தவர்களை அழைத்து வந்து கீழே இறக்கி பார்த்தபோது லோகநாதன் உயிரிழந்தது தெரிந்தது.
இது குறித்து உறவினர்கள் நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் நம்பியூர் போலீசார் உடலை கைப்பற்றி கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.