ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் மீன்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. திருச்செந்தூர், நாகப்பட்டினம், காரைக்கால், தூத்துக்குடி, கேரளா போன்ற பகுதிகளில் இருந்து அதிக அளவில் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. கடந்த மாதம் வரை மீன்கள் விற்பனை, வியாபாரம் அமோகமாக இருந்தது. ஆனால் தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி நடந்து வருவதால் பெரும்பாலான அசைவ பிரியர்கள் சைவத்துக்கு மாறிவிட்டனர். இதனால் இந்த வாரமும் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்டில் வியாபாரம் மந்த நிலையில் நடந்தது. இன்று மீன் மார்க்கெட்டிற்கு 20 டன் மீன்கள் வரத்தாகி இருந்தது. இது கடந்த வாரத்தை விட கூடுதலாகும். வரத்து அதிகரித்து வந்தாலும் மீன்கள் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் ரூ. 50 வரை குறைந்துள்ளது.