நாளை பள்ளிகள் திறப்பு: தயார் நிலையில் வகுப்பறைகள்

560பார்த்தது
நாளை பள்ளிகள் திறப்பு: தயார் நிலையில் வகுப்பறைகள்
தமிழகத்தில் அனைத்து வகையான அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 2வது வாரம் முதல் கோடை விடு முறை அளிக்கப்பட்டது. கோடை வெப்பம் அதிக அளவில் இருந்து வந்ததால் கடந்த 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட வேண்டியது ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து வருகின்ற 10ம் தேதி அனைத்து வகை யான பள்ளிகளும் திறக்கப் படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இதையடுத்து இன்றுடன் கோடை விடுமுறை நிறைவடைந்து நாளை (10ம் தேதி) பள்ளிகள் திறக்கப் பட உள்ளது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிக ளிலும் கடந்த வாரமே தூய்மை பணிகள் முடிக்கப்பட்டது.

வகுப்பறைகள் தூய்மை படுத்தும் பணியானது இந்த வாரம் நடைபெற்று வந்தது. மாணவ, மாணவிகளுக் கான கழிப்பறைகள் சுத்தம் செய்தல், குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்தல், கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் தூய்மை படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல்நாளிலேயே மாணவர்களுக்கு தேவையான நோட்டு, புத்தகங்கள் மற்றும் அர சின் சார்பில் வழங்கப்பட வேண்டிய அனைத்து வகையான பொருட்களும் முதல் நாளிலேயே வழங்கி முடிக்க அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி