ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பாண்டியாறு - மோயாறு இணைப்பு திட்ட பூர்வாங்க பாசன சபை கூட்டம் நம்பியூர் சமுதாய கூடத்தில் நேற்று(செப்.7) நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் டாக்டர். பிரபு தலைமை தங்கினார்.
பாண்டியாறு மோயாறு திட்ட பூர்வாங்க பாசன சபை கூட்டமைப்பு நம்பியூரில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாண்டியாறு மோயாறு திட்ட பூர்வாங்க பாசன சபை கூட்டமைப்பு நம்பியூரில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: அத்திக்கடவு அவிநாசி திட்டம், நொய்யல் ஆறு பாதுகாப்பு சங்கம், கௌசிகா நதி கரங்கள், பவானி நதி நீர் பாதுகாப்பு சங்கம், சிறுமுகை விண்ணப்பள்ளி திட்டம், நெல்லித்துறை காரமடை திட்டம் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து பாண்டியாறு மோயாறு இணைப்பு திட்டத்திற்காக ஒன்றுபட்டு போராடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
வருகின்ற அக்டோபர் 2 தேதி காந்தி ஜெயந்தி அன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் பாண்டியாறு- மோயாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றிட தமிழக அரசுக்கு தீர்மானம் நிறைவேற்றுவது.
அக்டோபர் 20ஆம் தேதி சென்னை மையமாகக் கொண்ட மூத்த பொறியாளர் சங்கத்தின் செயலாளர் திரு வீரப்பன் மற்றும் பொறியாளர் ஜெயபிரகாசம் அடங்கியோர் குழு பாண்டியாறு மோயாறு இணைப்பு திட்டத்தினை பற்றி மூத்த பொறியாளர் சங்கம் அரசுக்கு சமர்ப்பித்த 100 கோடி அளவிலான பாண்டியாறு மோயாறு இணைப்பு திட்டத்தினை பொதுமக்களுடன் பகிர்ந்து அது பற்றிய விழிப்புணர்வை நம்பியூர் கூட்டத்தில் ஏற்படுத்துவது .
நவம்பர் மாதம் அனைத்து கிராம சபை தீர்மானங்களையும் ஒன்று திரட்டி முதலமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் , மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து இந்த தீர்மானத்தை நிறைவேற்றிட கோரிக்கை வைப்பது.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இந்த திட்டத்தினை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய ஜனவரி மாதம் முதல் இருசக்கர வாகன பேரணிகளை திட்டத்தின் பயன்பெறும் மூன்று மாவட்டங்களிலும் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.