பாண்டியாறு -மோயாறு இணைப்பு திட்ட பூர்வாங்க பாசன சபை கூட்டம்

67பார்த்தது
பாண்டியாறு -மோயாறு இணைப்பு திட்ட பூர்வாங்க பாசன சபை கூட்டம்
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பாண்டியாறு - மோயாறு இணைப்பு திட்ட பூர்வாங்க பாசன சபை கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரபு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள்  சங்கங்களின் கூட்டு இயக்க ஒருங்கிணைப் பாளர் தெய்வசிகாமணி வரவேற்பு உரையாற்றினார்.
அத்திக்கடவு அவிநாசி திட்டம், நொய்யல் ஆறு  பாதுகாப்பு சங்கம், கௌசிகா நதி கரங்கள், பவானி நதி நீர் பாதுகாப்பு சங்கம், சிறுமுகை விண்ணப்பள்ளி திட்டம், நெல்லித்துறை காரமடை திட்டம் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து பாண்டியாறு மோயாறு இணைப்பு திட்டத்திற்காக ஒன்றுபட்டு போராடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

வருகின்ற அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் பாண்டியாறு- மோயாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றிட தமிழக அரசுக்கு தீர்மானம் நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி