6 நீறேற்று நிலையங்களில் 4 மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது,

56பார்த்தது
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொளப்பலூர் செட்டியாம்பதி பகுதியில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ள குளம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் சேர்க்கப்பட்டு நீர் நிரப்பப்பட்டு வருகிறது, இந்த குளம் நிரம்பும் தருவாயில் உள்ள நிலையில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே. ஏ. செங்கோட்டையன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,
விவசாயிகளின் 60 ஆண்டுகால கனவான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியது அதிமுக அரசு. கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, திருப்பூர் வடக்கு, அவிநாசி, சூலூர், பவானிசாகர், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், உள்ளிட்ட 8 சட்டமன்றத் தொகுதிகளில் இந்த அத்திக்கடவு அவிநாசி திட்டம் மூலம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் 6 நீர் ஏற்று நிலையங்களில் 4 மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது, 6 நீறேற்று நிலையங்களும் சரியான முறையில் இயக்கி குளங்களுக்கு தண்ணீர் வழங்கி இருந்தால் அனைத்து ஏரி குளங்களுக்கும் தண்ணீர் சென்றிருக்கும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்,

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி